திருக்குறள்
-சிறப்புரை
:1127
கண்ணுள்ளார்
காத
லவராகக்
கண்ணும்
எழுதேம்
கரப்பாக்கு
அறிந்து. ---- ௧௧ ௨௭
என் காதலர் என் கண்ணுள்ளேயே இருப்பதனால், கண்ணுக்கு
மை தீட்டும்போது அச்சிறுபொழுதும் அவர் மறைந்துவிடக் கூடும் என்று அஞ்சி , கண்ணுக்கு மை தீட்டுவதுமில்லை.
“ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண்ணுள்ளே தோன்றும்…” ---கலித்தொகை
ஊரீரே…!
என்னை இகழ்ந்தாலும் எம் கேள்வன் என்னை இகழ்ந்திலன் ; நெஞ்சால் நினைப்பிடத்துத் தோன்றுதலினும் கண்ணினுள்ளே தோன்றிக்கொண்டே இருக்கின்றான்.
கண்ணுக்கு மை தீட்டாத காரணம்...அதிகம் ரசித்தேன் ஐயா.
பதிலளிநீக்கு