செவ்வாய், 1 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 12

பரிபாடல் – அரிய செய்தி - 12
இசை இலக்கணம்
புரிநரம்பின் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும் இசையும் கூட
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க
மையோடக் கோவனார். பரிபா. 7 : 77 - 80
யாவராலும் விரும்பப்படும் பாலைப் பண் ஏழினையும் எழச் செய்து - புணர்த்துதற்குரிய முறுக்கேறிய நரம்பின் வழி இனிய தாளத்திற்கேற்ப அமையும் யாழின் இசையும் – வாயினால் பாடும் இசையும் தம்முள் பொருந்தின – அவற்றின் இசையைப் பொருந்தி குழலாகிய கருவி அளந்து நின்றது – முழவின் ஓசை எழுந்து முழங்கியது – அரசவையில் ஆடித் தலைக்கோல் பட்டம் பெற்ற மகளிரும் பாணரும் கூத்தாடலைத் தொடங்கினர். பாலைப் பண்கள் ஏழு – அவையாவன :  செம்பாலை . படுமலைப் பாலை. செவ்வழிப் பாலை. அரும் பாலை. கோடிப் பாலை. விளரிப் பாலை. மேற் செம்பாலை என்பனவாம். ( இசை – மிடற்றுப் பாடல்; குழல் – வங்கியம் ; முழவு – மத்தளம்; சென்னியர் – பாணர் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக