பத்துப்பாட்டு
– அரிய செய்தி
(நூல் வரலாறு
– முன்பதிவுகளில் காண்க.)
திருமுருகாற்றுப்படை
– இயற்றியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
உரையாசிரியர் – முனைவர் இரா. மோகன்.
-திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி 1
1. திருப்பரங்குன்றம்
முருகப்
பெருமான்
மந்தியும்
அறியா மரன்பயில் அடுக்கத்து
கரும்பும்
மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண்
கண்ணி மிளைந்த சென்னியன்
நக்கீரர். திருமுரு.
1: 42 – 44
முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம் ; ஆதலின்
அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கப்பெற்றது .
குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று
அறியா மரங்கள் நெருங்கிச் செழித்துள்ள பக்க மலைச் சாரலில் உள்ள – வண்டுகளும் மொய்க்காத
– சுடர்போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக் கட்டிய குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த
திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக