பரிபாடல் – அரிய செய்தி - 37
பரத்தை படும்பாடு
வையைக் கரையில் – தலைவியிடமிருந்து
காணாமல் போன வளையலையும் ஆரத்தையும் – பரத்தை ஒருத்தி அணிந்திருத்தலைக் கண்ட தோழியர்
– அவளைத் தொடர்ந்து – ஏசினர்….
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக்
கணிகை
…………………………………………………….
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மையை
கொல் என்னாமுன்
நல்லந்துவனார்.
பரிபா. 20 : 48 – 65
யாவராலும் விரும்பப்படும் காம இன்பத்தினை வஞ்சகத்தோடு கூடிய
பொய்மொழிகளோடும் சேர்த்துத் தன்னை நாடிவரும் காமுகரை மயக்கும் விலைமகளாம் கணிகையே
! நின் பெண்மையைப் பல ஆடவர்க்கும் பொதுமையாக்கும் தன்மையால் ஓர் ஆடவனால் பேணப்படுதல்
இல்லாதவளே! கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று
நுகரும் ஐம்புல இன்பங்களையும் நுகர்வனவாகிய காமுகப் பன்றிகள் நுகர்வதற்குரிய – இரண்டு
உதடுகளைக் கொண்ட தொட்டியே ! வனப்பாகிய வயலில் முதிராத நறுமணம் மிக்க கள்ளாகிய நீரைப்
பாய்ச்சிக் காமவெறியாகிய கலப்பையை நாட்டி எம்முடைய எருது சோம்பலின்றி உழுகின்ற பழைய
படைச் சாலே ! …. இங்ஙனம் மக்கள் முன்னிலையில் அவளைப் பலவாறு திட்டி உரைத்தாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக