பரிபாடல் – அரிய செய்தி - 36
வெங்கார் மணம்
மலர் ஆற்றும் தேன் மணமும் செறு வெயில்
உறுகால
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு
உதிர்த்த கனி நாற்றம்
நல்லந்துவனார். பரிபா. 20 : 9 – 10
வையை ஆற்றில் – மரங்கள் தரும் மலர்
மணமும் – சினந்து சுடும் வெயிலையும் மிக்க காற்றையும் உடையவாகிய காடுகள் தரும் வெங்கார்
மணமும் – மரக் கொம்புகள் உதிர்த்த கனிகளின் மணமும்… மணக்க.
( வெங்கார் மணம் – நீண்ட நாள் மழை வறண்டுவிட வெயிலானே பெரிதும்
சுடப்பட்ட நிலத்தின் மேல் புதுவதாக மழை பொழிந்தவுடன் அந்நிலத்திலுள்ள வெப்பத்தானே நிலத்தின்கண்
இருவகை ஆவி எழுந்து பரவி நிற்கும் - அந்த ஆவி
ஒருவகை மணமும் உடைத்தாம் – அந்த மணமே வெங்கார் மணம் என்று கூறப்பட்டது. இன்றும் கோடைமுடிந்து
ஆற்றில் தண்ணீர் வர – காய்ந்து கிடந்த விளைவயலில்
பாய்தலால் –அதனை வெங்கார் பாய்ச்சல் என்பர். அது மணம் உடையது. இந்த மணம் கற்புடைய மகளிரின் மேனி மணத்திற்கு உவமை
கூறப்படுதல் உண்டு – காண்க : சீவக சிந். 2503 .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக