பரிபாடல் – அரிய செய்தி - 40
கடைத் தெரு
இருந்தையூர் திருப்பதியில் வணிகர்
தெரு -
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப
உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல
பண்ணியம் வணிகர் புனை மறுகு ஒருசார்
விளைவதை வினை எவன் மென்புல வன்புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை
……………. பரிபா. திரட்டு. 1 : 22 – 29
ஆங்கு மற்றொரு பக்கத்தில் – உண்பதற்குரியவும்
பூசிகொள்வதற்குரியவும் அணிந்து கொள்ளற்குரியவும் உடுத்தற்குரிய உடைகளும் நீராடுவதற்குரிய பொருள்களும் மணி பொன் முதலான மலைபடு பொருள்களும்
கடல் விளை பொருள்களும் மற்றும் பட்டு – பருத்தித் துணி வகைகளும் ஆகிய குற்றமற்ற பயன்படு
பொருள்களை உள்நாட்டி லிருந்தும் கொண்டுவந்து தருகின்ற – நடுநிலையுடன் வணிகம் செய்யும்
அறச்செயலையும் உடைய அழகிய வணிகர்கள் தெருக்களும்
–
மற்றொரு பக்கத்தில் – விளைபொருள் தொழிலாகிய மருதம் நெய்தல்
ஆகிய மென்புல உழவர்களும் – குறிஞ்சி முல்லை ஆகிய வன்புலத் தொழில் புரிவோர் தெருக்களும்
– உழுவித்துண்போர் குடியிருக்கும் காவலை உடைய தெருக்களும் உள்ளன. பிறவிடங்களில் தத்தம்
அறத்தில் வழுவாது வாழும் மக்கள் வாழ்தலால் – ந்ல்லனவாகிய இன்பம் பலவும் இயல்பாகவே உள்ளன
– என்பதாம். ( உண் பொருள்கள் – நெல். முதிரை. நெய். பால். தயிர். காய். கனி. கிழங்கு.
இலை. தீஞ்சோறு – பலவகைப்பட்ட பண்ணிகாரம் – நறவு
இன்ன பிறவும். பூசுவ – சந்தனம் முதலியவை.
பூண்ப – அணிகலன்கள் . மாலைகள். உடுப்பவை – பட்டு . துகில் முதலியன. மண்ணுவ – பத்துத்
துவரும் ஐந்து விரையும் 32 ஓமாலிகையும். களமர் – உழுதுண்ணும் வேளாளர். உழவர் – உழுவித்துண்ணும்
வேளாளர். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக