நீரங்காடி
வையை ஆற்றின் புதுப் புனலில் நீராட
மக்கள் குவிந்தனர் – மக்கள் –
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணிகொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி
ஏர் அணி கொண்டார் இயல்பு
……………. பரிபா. திரட்டு. 2 : 7 – 10
அப்புதுப் புனலில் நீராடும் இன்பத்தை விரும்பி - தூசிபடையினது இயல்பினைப் போன்ற மகிழ்ச்சியுடன்
– ஒவ்வொருவரும் தத்தம் இயற்கை அழகிற்குப் பொருத்தமான ஒப்ப்னைகளால் அழகு செய்துகொண்டு
– நல்ல நிறம் பொருந்திய – நீராட்டிற்குரிய நெட்டி முதலியவற்றால் செய்த பல்வேறு வகையான அழகுப் பொருள்கள் கொண்ட – நிறைந்த
நீரங்காடியில் சென்று – தங்கள் இயற்கை அழகுடன் அவ்வங்காடியில் உள்ள பொருள்களாலும் அழகு
செய்து கொண்டனர். (நீரங்காடி – நீராடுவோர்க்கு வேண்டிய பொருள்கள் விற்கும் கடைத் தெரு
– நெட்டியால் செய்தவையும் பொன்மீன் . பொன் நண்டு. மாலை . மணப் பொருள்கள் இன்னபிறவும்
. இவ்வங்காடி - ஊரங்காடி …….. பெருங்கதையில் இடம்பெற்றுள்ளது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக