பரிபாடல் – அரிய செய்தி - 38
பத்தினிப் பெண்டிர்
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேர்க
மைந்து உற்றாய் வெஞ்சொல் மடமயிற்
சாயலை
வந்திக்க வார் ……
நல்லந்துவனார். பரிபா. 20 : 68 – 70
கணவனின் கள்வி
( திருடி) யாகிய அப்பரத்தை – தலைவியை நோக்கிச் சில சுடுசொற்களைக் கூற – அதுகண்ட முதுபெண்டிர்
- ஏடி… ! கற்புடைமையால் நினைக்கும் அளவிலே
பாவம் நீங்கும் தன்மையை உடைய அக்குலமகளைச் சினவாதே ! நீ கொடுமை மொழி கூறிப் பேதைமை
உடையை ஆயினாய் – இப்பாவம் தீரும் பொருட்டு மயில் போலும் சாயலை உடைய – அத்தலைவியை வணங்க
வருவாயாக – என்றனர். (பத்தினிப் பெண்டிர் தெய்வத்தன்மை உடையவர் என்பதாம். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக