சனி, 2 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 724

திருக்குறள் – சிறப்புரை : 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். --- ௭௨௪
சான்றோர் அவையிடத்துத் தாம் கற்றவற்றை அவர்தம் மனம் கொள்ளுமாறு சொல்லித் தம்மைவிட அதிகம் கற்ற சான்றோரிடமிருந்து மேலதிக நுண்பொருள்களைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
“மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” –நாலடியார்.

மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை. மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக