ஞாயிறு, 3 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 725

திருக்குறள் – சிறப்புரை : 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
 மாற்றம் கொடுத்தற் பொருட்டு.=== ௭௨௫
அவைக்கு அஞ்சாது வினாக்களுக்குரிய விடைகளை முறையாகக் அளித்தற் பொருட்டும் கற்க வேண்டிய நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும்.
“போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு” ----- நாலடியார்.
புத்தகங்களைப் பதுகாத்து வைக்கும் புலவர் வேறு ; பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைக்கும் புலவர் வேறு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக