வெள்ளி, 1 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 723

திருக்குறள் – சிறப்புரை : 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.--- ௭௨௩
பகையை வெல்ல அஞ்சாது  போர்க்களம் புகுந்து இறப்போர் பலர்; ஆன்றோர் நிறைந்த அவைக்கண் அஞ்சாது உரையாற்றுவோர் சிலரே.
“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
 எண்ணி இடத்தாற் செயின்.---குறள். 497.
ஒரு செயலை நினைத்தபடி நிறைவேற்றுவதற்குச் சரியான இடத்தைச் தேர்வுசெய்துவிட்டால். அச்செயலை முடிப்பதற்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக