திருக்குறள்
– சிறப்புரை : 746
எல்லாப் பொருளும்
உடைத்தாய் இடத்துதவும்
நல்லார் உடையது அரண்.—௭௪௬
பகைவரல் அரண் முற்றுகையிட நேரின் அரண் உள்ளே இருப்போர்க்குத் தேவையான
எல்லாப் பொருள்களும் உடையதாய், நெருக்கடியான நேரத்தில் உதவக்கூடிய ஆற்றல் வாய்ந்த வீரர்களையும்
கொண்டது அரணாம்.
“
அமர்கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானைக் குட்டுவன்.”
----பதிற்றுப்பத்து.
போரை விரும்பிச் செய்வதில் தனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்னும்படி
பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவரது அரிய மதிலை எதிர்நின்று வென்று கைக்கொள்ளும்
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக