திருக்குறள்
– சிறப்புரை : 730
உளரெனினும்
இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா
தார்.
--- ௭௩0
சான்றோர் அவையில் தாம் கற்றவற்றை எடுத்துரைக்க அஞ்சுபவர் உயிருடன் இருப்பினும்
இறந்தாரோடு வைத்து எண்ணத்தக்கவர்களே.
“ஒத்த
தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள்
வைக்கப் படும்.”— குறள்.214.
உயிர் இரக்கம் அறிந்து உதவிபுரிந்து வாழ்பவனே உயிருடன் வாழ்பவன் ஆவான்;
பிறர் துன்பம் கண்டு இரக்கம் காட்டாத மற்றையோர் உயிருடன் இருப்பினும் அவர்கள் செத்தாருள் வைத்து எண்ணத்தக்கவர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக