திருக்குறள்
– சிறப்புரை : 748
முற்றாற்றி
முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது
அரண். ---- ௭௪௮
கோட்டையை முற்றுகையிடுவதில் வல்லவராய், அரணைச் சுற்றிவளைத்த பகைவர்களையும்
தடுத்து நிறுத்தி உள்ளிருப்போரையும் தாம் பற்றிய இடத்தைவிட்டு அகலாது, போர் புரிந்து
வெல்வதற்கு ஏற்றதாக அமைவைது அரண்..
“வண்டுபடு
கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு
பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா
மரபின் உழிஞை பாட….” ---பதிற்றுப்பத்து.
வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாகப் புனைந்த பாண் மகளிர், நரம்புக்
கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்களுக்குப் பணியாத இயல்பை
உடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக