திருக்குறள்
– சிறப்புரை : 744
சிறுகாப்பிற்
பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது
அரண்.--- ௭௪௪
சிறிய வலிய காவலால் காக்கப்படும் இடம் அகன்ற இடத்தை உடைத்தாகி அமைந்து,
அரணை அழிக்க வந்த பகைவர்தம் ஊக்கத்தினை அழிக்கவல்லது அரணாவது.
“நசை
தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
வசைபட
வாழ்ந்தோர் பலர்கொல்……” –புறநானூறு.
வேந்தே..! ஆவலால் வெற்றி பெற விரும்பிவந்த பகைவர், நின்னை எதிர்த்து வெற்றிபெற
முடியாமல் இகழ்ச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக