திருக்குறள்
– சிறப்புரை : 727
பகையகத்துப்
பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற
நூல்.--- ௭௨௭
சான்றோர் அவைக்களத்தில் பேச அஞ்சுகின்றவன் கற்ற நூல்; போர்க்களத்தில்
பேடி ஒருத்தித் தன் கையில் ஏந்திய வாள் போல் பயனற்றதாகும்.
”அவைக்குப்
பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு
இல்லா உடம்பு.” ---நான்மணிக்கடிகை.
சான்றோர் இல்லாத அவை பாழ்; கல்வியறிவு இல்லாத உடம்பு பாழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக