திருக்குறள்
– சிறப்புரை : 743
உயர்வகலம் திண்மை
அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும்
நூல்.
– ௭௪௩
உயர்வு, அகலம், உறுதி, பகைவர் எளிதில் அணுகமுடியாத அருமை ஆகிய இந்நான்கும்
அமைந்திருப்பதே அரண் என்பர் அரண்முறை வகுத்த நூலோர்.
“முழுமுதல்
அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி
மரபிற்றாகும் என்ப.” –தொல்காப்பியம்.
மதிலகத்து எல்லாக் கருவிகளையும் உடைய முழுநிலையுடைய கோட்டையை முற்றுகை
இடுதலும் அதைக் கொள்ளுதலும் என்ற முறையில் அமையும் என்று கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக