திருக்குறள்
– சிறப்புரை : 751
பொருளல் வரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்லது
இல்லை பொருள் –௭௫௧
ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் ஒரு பொருளாக மதிக்கச் செய்யும் பொருள்
அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு ஒன்றும் இல்லை.
“
அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை.”
–பழமொழி.
அருளுடைய நல்லார் முதல், அருள் அல்லாதார் வரை, பொருள் உடையோரைப் புகழ்ந்து
போற்றாதார் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக