திருக்குறள்
– சிறப்புரை : 739
நாடென்ப நாடா
வளத்தன நாடல்ல
நாட வளந்தரு
நாடு.
--- ௭௩௯
மக்கள் தங்கள் வாழ்வாதரங்களைத் தேடி அலையாமல் இயற்கையாகவே அனைத்து உயிர்களும்
வாழ்வதற்குரிய வளங்களைக் கொண்டுள்ளதையே நாடு என்று சொல்வர்; உழைப்புக்கேற்ற வளங்களைத்
தரும் நாட்டை நாடு என்று கூறார்.
“
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும்
மரனும் பயன் எதிர்பு நந்த”----மதுரைக்காஞ்சி.
மழை வேண்டுங்காலத்துத் தவறாது பெய்து. நாடெங்கும் விளையுள் பெருகி. ஒரு
விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைய. விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்களும்
தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு தவறாமல் வழங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக