செவ்வாய், 4 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -72


மெய்ப்பொருள் காண்பது அறிவு -72
சோதிடம் சுத்தப் பொய்
சோதிட வல்லுநர் சிலரே சோதிடம் சுத்தப் பொய் என்று கூறுகின்றனர்.
சோதிட வல்லுநராகத் திகழ்ந்த டைகோ பிராகே பிற்காலத்தில் சோதிடம் உண்மையில்லை என்றார்.
மனிதனுடைய விதியைக் கோள்கள் நிணயிக்கின்றது என்ற கொள்கையில் டைகோ நம்பிக்கை இழந்தார்.
(But in his later years even Tycho ceased to belive that the stars had nothing to do with the destiny of humanbeings.)
 டைகோவின் நண்பரான கெப்லர்  ( Kepler : 1571 – 1630, was born at Wellin Wirtemberg, German) வானியல் வல்லுநராகவும் சிறந்த சோதிடராகவும் விளங்கினார்.டைகோ இறந்தபிறகு அவர் விட்டுச் சென்ற வானியல் ஆய்வினைத் தொடர்ந்து நடத்திக் கோள்களில் இயக்கவிதிகளைக் கண்டறிந்தார். கெப்லர் சோதிடம் குறித்து, “அறிவார்ந்த வானியல் அன்னைக்குப் பிறந்த மூடமகள் சோதிடம்” என்றார். மேலும் “ இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் பிழைப்புக்கான வழியை வழங்கி இருக்கிறது, அதைப்போல வானவியலாரின் தேவைகளை (பிழைப்பு) நிறைவு செய்வதற்குச் சோதிடவியல் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார். –இரெ.குமரன்…. தொடரும்….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக