மெய்ப்பொருள்
காண்பது அறிவு -88
அனாக்சி மேண்டர்
(Anaximander) கி.மு. 610 – 546.
இவர்
தேலிசின் மாணவர். தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர்.
எந்த ஒரு மூலகத்தையும் பேரண்டத்தின் முதற் காரணமாக இவர் கொள்ளவில்லை இப்பேரண்டம் எதிர்மறைகளின்
தொடர்பு என்பது இவர் கருத்து. நீர்x நெருப்பு ; வன்மை x மென்மை ; என்பன போன்று
பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒன்றே அனைத்திற்கும்
மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலேயே அடங்கும்.
மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே. மனிதன்
மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக