மெய்ப்பொருள்
காண்பது அறிவு -82
அருட்பிரகாச
வள்ளலார்
இராமலிங்க அடிகள்
: 1823 – 1873
உருவ வழிபாட்டை- எதிர்த்தார்
பல
தெய்வ வணக்கம் – வெறுத்தார்
அந்நியராட்சியைச்
சாடினார்
சாதி,
சமய வேறுபாடற்ற மக்கள் ஒற்றுமையை விரும்பினார். ஒளி வழிபாடு போற்றினார். சமரச சுத்த
சன்மார்க்க சங்கம் அமைத்தார்.தர்ம சாலையில் அனைத்து மக்களும் ஒன்றாக அமர்ந்து உண்ண
வழி வகுத்தார்.
’மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று வேண்டினார்.
’இச்சாதி
சமய விகற்பங்களெல்லாம் தவிர்ந்தே
எவ்வுலகும்
சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும்’ என்று விரும்பினார்.
’கண்மூடி
வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ விழைந்தார்.
‘ஒத்தாரும்
உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளராகி
உலகியல் நடத்த வேண்டும்’ என்றார்.
‘எத்துணையும்
பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்.’ என்னும் நிலை
வேண்டி ஏங்கினார்.
‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே
அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து
வீணேநீர் அழிதல் அழகலவே.’ என்று அறியாமையால் மூட நம்பிக்கைகளில் உழன்று அல்லலுறும்
மக்களை எண்ணி இரங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக