திருக்குறள் -சிறப்புரை
:1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. – ௧000
(கலம் தீமையால் திரிந்தற்று)
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் தூய்மையற்ற கலத்தின் தன்மையால் நல்ல
பாலும் கெட்டுப் பயனற்றுப் போவதைப் போல் அப்பெருஞ் செலவமும் யார்க்கும் பயன்படாது போகும்.
“நல்லார்கண் பட்ட வெறுமையின்
இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
குறள். -408.
கல்வியறிவிற் சிறந்த சான்றோரை வருத்தும் வறுமைதரும் துன்பத்தைவிடக் கல்லாதவர்கள்
கையில் கிடைத்த பெருஞ் செல்வம் மிக்க துன்பத்தைத் தரும்.
எளிமையான விளக்கத்துடன் திருக்குறள் பதிவுகள் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு