செவ்வாய், 4 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :985


திருக்குறள் -சிறப்புரை :985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.--- ௯௮
அரிய பெரிய செயல்களைச் செய்துமுடிக்க எண்ணும் சான்றோர், தமக்குத் துணையாகத் தகுந்தாரையும் பணிந்து இணைத்துக்கொள்வர். இவ்வாற்றலே பகைவரின் பகைமையையும் அழிக்கும் கருவியாகும்.
“ தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.” –புறநானூறு.
 தாம் மட்டுமே வாழ முயலது, பிறர் வாழ உழைக்கும் சான்றோர் பலர் இருப்பதாலன்றோ இவ்வுலகம் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக