வெள்ளி, 14 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :990


திருக்குறள் -சிறப்புரை :990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.---- ௯௯0
சான்றோர்களின் சான்றாண்மையே குறைவுபடுமாயின் இப்பெரிய நிலவுலகம் தீயோர்களைச் சுமந்து நிலைபெறாதன்றோ…! நிலவுலகம் அழிந்துபடும் என்பதாம்.
“ சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்.” –குறிஞ்சிப்பாட்டு.
சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையும் என்றால் அவற்றைக் குற்றமற நீக்கிப் தம் புகழை நிலை நிறுத்துதல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை என்று கூறுவர் தொல் புகழ் அறிஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக