சனி, 1 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :982


திருக்குறள் -சிறப்புரை :982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.--- ௯௮
சான்றோர்க்கு அணியாவது அவர்தம் குணநலன்களே;  அவ்வணிநலத்திற்கு  இணையாக வேறு  எவ்வகை அணிநலனும்  ஈடாகாது.
” ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.” –புறநானூறு.
கல்வி, கேள்வி, புலனடக்கம் யாவும் சிறந்து விளங்கும் சான்றோர் பலர் வாழும் ஊரே யான் வாழும் ஊர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக