வியாழன், 13 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -77

மெய்ப்பொருள் காண்பது அறிவு -77
“ஊரெல்லாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.” –திருமந்திரம்.
அழியும் உடலில் ஆவி போகுமுன் ஆற்றும் செயல்களை அறவழியில் ஆற்றுவீராக.
ஆசை துன்பங்களுக்குக் காரணம் ; பேராசை அழிவுக்குக் காரணம்
ஆசை அறுமின் என்கிறார் திருமூலர்.
ஆசையறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசையறு மின்கள்
ஆசைப்படப் பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.” –திருமந்திரம்.
”ஆலயம் தொழுவது சாலவும் நன்று”—என்றது கோயில் வழிபாடாயினும், திருமூலர் உள்ளம் பெருங் கோயில் ; உடம்பே ஆலயம் என்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டுகிறார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காள மணி விளக்கே” – திருமந்திரம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் இறைக்கோட்பாடு கொண்டு ஒழுக வற்புறுத்தும் திருமூலர் மானிடச் சமுதாயம் அன்புடைமை, கொல்லாமை, நடுவு நிலைமை, ஈகை, பிறன்மனை நயவாமை, கள்ளுண்ணாமை, புலால்மறுத்தல், வாய்மை இன்னபிற நல்லொழுக்கங்களைக் கைக்கொண்டு வாழ்வில் உய்ய வேண்டுகிறார்.
பிற்காலத்தில்….
தமிழ்நாட்டில் சமயத்துறையில் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து முற்போக்கான மனித நேய சிந்தனைகள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்தன. வைதிக தர்மம், பிராமணீய ஆதிக்கம், சாதிக்கொடுமைகள் இவற்றை எதிர்த்துச் சித்தர்கள் பரப்புரை ஆற்றத்  தொடங்கினர். இவர்கள் ஓர் இயக்கமாகவே செயல்பட்டனர்.  … தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக