திங்கள், 3 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :984


திருக்குறள் -சிறப்புரை :984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. ----- ௯௮
தவத்தின் சிறப்பாவது பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது ‘ சான்றாண்மையின் மேன்மையாவது பிறரிடத்துக் காணும் குற்றம் குறைகளைச்  சொல்லாதிருப்பது.
“ கடுக்கி ஒருவன் கடுங் குறளை பேசி
மயக்கி விடினும் மனப் பிரிப்பு ஒன்று இன்றித்
துளக்கம் இல்லாதவர் தூய மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.” ---நாலடியார்.
ஒருவன் முகத்தைக் கடுக்கிக் கொடுஞ் சொற்களைப் பேசி மயங்கச் செய்தாலும்  சான்றோர், சிறிதும் மன வேறுபாடு கொள்ளாமல் விளக்கினுள் தோன்றும் ஒளி மிகுந்த தீச் சுடரைப் போன்று தூய மனத்தராய் விளங்குவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக