திருக்குறள் -சிறப்புரை
:989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.---- ௯௮௯
அறிவிற் சிறந்தோர் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரையாக இருப்பர். அக்கடலும்
காலத்தால் நிலை மாறிக் கரையைக் கடப்பினும் சான்றோர், என்றும் தம் நிலையில் திரியார்.
“நிலம் திறம் பெயரும் காலை
ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு
அறியலையே.” –பதிற்றுப்பத்து.
நிலவுலகம் தன் கூறுபாடு எல்லாம் நீங்கும் ஊழிக் காலம் என்றாலும் நீ (செல்வக்கடுங்கோ
வாழியாதன்) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக