மெய்ப்பொருள்
காண்பது அறிவு -85
கன்பூசியசு ( கி.மு. 550 – 523 ) Confucianism
சீனத்
தத்துவ ஞானி.. “ பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று கருதுகிறீர்களோ அதை நீங்கள்
பிறருக்குச் செய்யாதீர்கள்.”
இவர்
கடவுள், மதம், ஞானம் எதையும் இவர் போதிக்க வில்லை, நடைமுறையில் மனிதன் ஏற்று ஒழுக வேண்டிய
நெறிகளை மட்டுமே கற்பித்தார்.
“
வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது மரணத்தைப் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள
முடியும்..? என்று வினவினார்.
இவருடைய குறிக்கோள்கள்
1. அரசுக்குக்
கடமையாற்றல்
2. . இளைஞர்களுக்குக்
கற்பித்தல்
3. சீனப் பண்பாட்டை
எதிர்காலச் சந்ததியினருக்குப் பதிப்பித்தல்.
மேலை நாட்டுத்தத்துவம் மதத்தோடு தொடர்புடையது. சீன
நாட்டுத் தத்துவம் அறிவுக் கலைகளோடு தொடர்புடையது.
சீனரின் தத்துவ மூலம் – யாங்- யின் (Yang – Yin)
யாங் – ஆண்மை : படைக்கும் ஆற்றல்
யின்
- பெண்மை : கிரகிக்கும் ஆற்றல்.
“ உலகம் முழுவதற்கும்
ஓர் ஒழுங்கு, ஒரு பொது ஒழுக்கம், ஒரு பொதுச் சமுதாயம் அமைய வேண்டும். அதற்கு உலகப்
பொதுத் திட்டம் ஒன்று வேண்டும்…
இதற்கு அடிப்படை ஒரு பொது அறநெறி.
மனிதனின் செயல் அந்த அறநெறியோடு இசைந்திராவிட்டால் மக்களும் அரசும் இயற்கை ஒழுங்கும் குழம்பிக்கிடக்கும்.
கன்பூசியசு
கம்பனின் கோசல நாடு போன்று “பொது நல நாடு”
ஒன்றைப் படைத்துக்காட்டுகின்றார். இவரின் அறிவுரைகளில் குடும்பம், அரசியல், சமூகம்,
ஆகியவற்றில் ‘தனிமனித ஒழுக்கம்’ முதன்மைப் பங்குவகிக்கிறது. தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக