வியாழன், 6 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :987


திருக்குறள் -சிறப்புரை :987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. --- ௯௮
தனக்குத் துன்பம்தரும் செயல்களைச் செய்தவர்களுக்கு, அவர்கள் நாணுமாறு நன்மைதரும் செயல்களைச் செய்யாவிட்டால்  சால்பு எனும் சான்றாண்மையால் என்ன பயன் விளையும் ?.
“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ.” ----நற்றிணை.
கொடிய தீமை செய்வோரைக் கண்டவிடத்தும் அவர் உள்ளம் வருந்தி உணருமாறு, இனி அவ்வாறு செய்யாதிருக்க என்று பலமுறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் சான்றோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக