மெய்ப்பொருள்
காண்பது அறிவு -83
புரட்சி
’
இயற்கையான விதிகளுக்குட்பட்டு இயங்கும் சமுதாய மாற்றத்தினை உடனிருந்து முழுமையாக்கும்
தாதி (செவிலி)தான் புரட்சி .’ –காரல் மார்க்சு.
சமுதாயப் புரட்சி
‘உற்பத்தி
சக்திகள் உற்பத்தி உறவுகளோடு பொருந்தா நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது.
பழைய சமுதாய உறவுகளைப் பாதுகாக்க முயலுகிற ஆளும்
வர்க்கத்தின் வன்முறைக்கு எதிராக முற்போக்குச் சக்திகள் வன்முறையைப் பயன்படுத்தி எதிர்க்கத்
தொடங்குகின்றன. இந்நிலையில் வர்க்கப் போராட்டம் அதிகபட்ச தீவிரத்தன்மை அடைகிறது. இந்நிலைமையைத்தான்
சமுதாயப் புரட்சி என்கிறோம்.’
சமுதாயப் புரட்சி என்பது சமுதாய உறவுகள் அனஒத்தையும்
முற்றிலும் மாற்றிய்மைத்துப் புதியதொரு சமூகப் பொருளாதார அமைப்பைத் தோற்றுவிப்பதாகும்.
ஒரு பழைய சமுதாயம் ஒரு புதிய சமுதாயத்தைக் கருவினுள்
கொண்டிருக்கும்போது வன்முறைப் புரட்சி புதிய சமுதாயம் பிரசவிக்க மருத்துவச்சியாக இருக்கிறது.
“
முதலாலித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம்.
ஏகாதிபத்திய அறிவாளிகள், பொருளாதார விடுதலையை
ஒதுக்கிவிட்டு, அரசியல் விடுதலையையே வற்புறுத்துகிறார்கள். ஆனால் பொருளாதார விடுதலையே
மிக முக்கியமானது” –லெனின்.
இந்தியா அரசியல் விடுதலை மட்டுமே பெற்றது. பொருளாதார
விடுதலை பெறவே இல்லை . தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக