சனி, 15 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :991


திருக்குறள் -சிறப்புரை :991
100  : பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. ---- ௯௯௧
யாவரிடத்தும் அன்புடன்பழகும் எளிய தன்மை உடையவராய் இருத்தல் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைதற்கு எளிய வழி என்பர் அறிவுடையோர்.
“ முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.” – புறநானூறு.
நீதி வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத்துளியை விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்றவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக