புதன், 5 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :986


திருக்குறள் -சிறப்புரை :986
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.---- ௯௮
சான்றாண்மையின் பெருமையை அறிதற்கு அமையும் உரைகல்லாவது தமக்கு இணை இல்லாதாரிடத்தும் தோல்வியைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பே.
“ நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்
 கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால்
சான்றவர்க்கு.” ---- பழமொழி.
நற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வருத்துவராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர்தம் கொள்கை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக