ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :983


திருக்குறள் -சிறப்புரை :983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண். ---- ௯௮
யாவரிடத்தும் அன்பும்,பழிக்கு நாணுதலும் அனைவரையும் அரவணைத்தலும் உயிர்களிடத்துக் கருணையும் சொல்தவறாமையும் ஆகிய ஐந்து பெருங்குணங்களும் ஒருங்கிணைந்து தூணாக நின்று தாங்கிநிற்பதே சான்றாண்மை ஆகும்.
“ வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
 நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான.’’” –தொல்காப்பியம்.
உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது ; வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோராகிய சான்றோரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக