மெய்ப்பொருள் காண்பது அறிவு -78
திருவள்ளுவர்
திருவள்ளுவர் உலகம் இருண்டது என்று கருதியவரல்லர்; வாழ்வதற்குரியது உலகம் என்றும் ; வாழ்ப்பிறந்தவன் மனிதன் என்றும்
கருதினார். இடர்ப்பாடுகளைப் பொடிப்பொடியாக்கித் துயரங்களை எதிர்த்து நின்று போராடி
வெல்பவனே சிறந்த மனிதன் என்று திருவள்ளுவர் நம்பினார். –அ.சிதம்பரநாதன்.
”திருக்குறள் என்னும் பெயர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில்
இயற்றப்பட்ட ’கல்லாடம்’ என்னும் நூலிலே காணப்படுகிறது. திருவள்ளுவ மாலையில் ’முப்பால்’
என்ற பெயர் உள்ளது.”
திருக்குறளை ‘அற.ம்’ எனப் பெயரிட்டும்
அழைப்பர்.
அறக்கோட்பாடு
மனத்துக்கண்
மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல
நீர பிற. குறள்.34.
இவ்வுலக வாழ்க்கைக்குச் செல்வம் துணையாகுமானால்
அதுவே இன்ப வாழ்க்கை என வள்ளுவர் கருதுவார். இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பதே இன்ப வாழ்க்கைக்கு
வழி என்ற கூற்றினை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக ஏற்றுக்கொண்ட
குறிக்கோள்கள் அற வாழ்க்கை, பொருளீட்டல் இவை இரண்டால் ஏற்படும் இன்பமான இல்லற வாழ்க்கை
ஆகிய மூன்றுமே. பிற்காலச் சமய நூலார் கூறும் வீட்டினை வள்ளுவர் முக்கியமான குறிக்கோளாகக்
கூறவில்லை.
அறம் + இன்பம் = மனித வாழ்வு
’அறத்தான் வருவதே இன்பம்’
இதுவே மானிட மதிப்புகளில் முதன்மை.
இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.
அறவியல் பற்று அரிசுடாட்டில் அறிவு இன்பத்தை
‘யூடோமியா (Eudomea) என்பார். இது புலன் நுகர்
இன்பம் (Pleasure) அல்ல.
“அறம் என்பது நன்மை
நன்மை என்பது பயன் தருவது
பயன் தருவன எல்லாம் இன்பம் அளிப்பன
அறிவு பயன் தருகிறது
அறிவு இன்பம் தருவதே
எனவே அறமும் இன்பம் தருவதே –சாக்ரடிசு.
பிற்காலத்தில்தான்
(கி.பி. 5) இன்பம் இரண்டானது. பேரின்பம் ஆன்மா இன்பமாகியது. சங்கப்பாடல்களில் இருவகை(சிற்றின்பம்
;பேரின்பம்) இன்பம் இல்லை என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக