செவ்வாய், 2 அக்டோபர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1008

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. ----- ௧00௮

வறுமையுற்றார்க்கு ஒன்றும் கொடுத்து உதவாதன் செல்வத்தை எவரும் விரும்பார் ; அச்செல்வமானது ஊரின் நடுவே நச்சுமரம் பழுத்து  யார்க்கும் பயனின்றி அழிந்து போவதைப் போன்றது.

”கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” –கலித்தொகை.

உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக