திருக்குறள் -சிறப்புரை
:1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. --- ௧0௩௨
உழவுத் தொழில் செய்ய இயலாது பிற தொழில் செய்வாரையும் உழவர்கள் உணவளித்துக்
காப்பதால், உழவர்கள் உலக மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேர்ச் சக்கரத்தைக்காக்கும்
அச்சாணி போன்றவர்கள்.
“ குளம் தொட்டுக் கோடு பதித்து
வழிசீத்
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி
– வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்றிவைம்
பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது
“ –சிறுபஞ்சமூலம்.
குளம் வெட்டி, கரைமேல் மரங்களை நட்டு, மக்கள் செல்ல வழி அமைத்து, தரிசு
நிலங்களைச் செப்பம் செய்து, உழுவயலாக்கி, நீர் வளம் நிறைந்த இடத்தில் கிணறு உண்டாக்கி,
ஆகிய இவ்வைந்து அரிய செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்திற்கு இனிதாகச் செல்வான்.
உழவின் சிறப்பினைப் பகிர்ந்த விதம் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.
பதிலளிநீக்கு