திருக்குறள் -சிறப்புரை
:1031
104. உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.---- ௧0௩௧
குடிப்பெருமைக்கு உரிய, உயர்ந்த தொழிலாக உழவுத்தொழிலைக் குறிக்கின்றார்
திருவள்ளுவர்.
ஊரெல்லாம் சுற்றினும் உயர் தொழிலெனப் பலவற்றைப் போற்றினும் இவ்வுலகம்
ஏர்த்தொழில் பின்னேதான் சுழல்கிறது. அதனால், உழைப்பின் வருத்தம் மிகுதி என்றாலும் உயிர்களுக்கு
உணவளிக்கும் உழவே உலகின் தலைசிறந்த தொழிலாகும்.
“ இரப்போர் சுற்றமும் புரப்போர்
கொற்றமும்
உழவிடை விளைப்போர்……”
------சிலப்பதிகாரம்.
இரந்து வாழ்வோர் சுற்றமும் இல்லார்க்கும்
இயலார்க்கும் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும் கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில்
வழியே சிறப்படையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக