திருக்குறள் -சிறப்புரை
:1011
102. நாணுடைமை
கருமத்தான் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. ------ ௧0௧௧
சான்றோர் செய்யத்தகாத செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படுவதே நாணம் ஆகும்.
பிற நாணம் என்பதெல்லாம் குலமகளிர் மெய்யின்கண் தோன்றுவதாகும்
”பேணுப பேணார் பெரியோர்
என்பது
நாணுத் தக்கன்று அது காணுங்
காலை.” ---நற்றிணை.
.ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக