திங்கள், 1 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1007


திருக்குறள் -சிறப்புரை :1007

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. ---- ௧00௭

இல்லாதார்க்கும் இயலாதார்க்கும் ஒன்றும் கொடுக்காது சேர்த்துவைத்த செல்வமானது, எழில் நலம் வாய்ந்த இளநங்கை ஒருத்தி,  கொள்வாரின்றித் திருமணமாகாது தமியளாகி முதுமை அடைந்ததைப் போன்றது.

“யானை எருத்தம் பொலியக் குடைநிழல்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வார் தாம்கொண்ட
மனையாளை மாற்றார் கொள.” ---நாலடியார்.

யானையின் மீதமர்ந்து,வெண்கொற்றக்குடை நிழலிலே சேனைகளுக்குத் தலைவனாகச் சென்ற அரசர்களும் முன்செய்த தீவினையால் தம் நிலையினின்று வேறுபட்டு எல்லாவற்றையும் இழந்து,  தம் மனைவியரையும் பகைவர்கள் கொண்டுபோக, அரசர்கள் வீழ்வர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக