சனி, 6 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1012


திருக்குறள் -சிறப்புரை :1012
ஊனுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. ---- ௧0௧௨
ஊனும் உடையும் தவிர்ந்த மற்றவையெல்லாம் உலகத்து வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானவையே ஆயின் நாணுடைமை என்னும் குணம் ஒன்றே மாந்தர்க்குச் சிறப்பானதாகும்.
“ உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று…” ---தொல்காப்பியம்.
உயிரினும் சிறந்தது நாணம் ; நாணத்தைக் காட்டிலும் குற்றம் தவிர்ந்த மெய்யுணர்வாகிய கற்பே சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக