மெய்ப்பொருள்
காண்பது அறிவு -100
பெனிடிக்ட் ஃச்பினோசா (Benedict Spinoza) கி.பி. 1632 -1677.
பகுத்தறிவியச் சிந்தனையாளர். தம் கொள்கைக்கேற்ப வாழ்ந்துகாட்டியவர். அஞ்சாமல்
பரப்புரை ஆற்றியவர். இவர் பன்மொழிப் புலமை உடையவர்.
சிந்தனையில்
தனித்துவம் – தீவிர வாதி – கடவுள் ஒரு பொருள் – சமயக் கொள்கைகள் வெற்றுக் கற்பனை –
யூத சமயத்தின் பழமைகளை மறுத்தார் – மதத்தைவிட்டு வெளியேறினார்- வறுமை செம்மை தந்தது.
நூல்
இவர் எழுதிய அறவியல் (எத்திகா) இலக்கியச் சுவை நிரம்பிய
தருக்க நூல்.
செறி பொருள்
இது
பிறிதொன்றால் படைக்கப்படாமல் தன் இருப்புக்குத் தானே காரணமாய் அமைகிறது. இதுவே கடவுள்.
கடவுள் எண்ணிலா இயல்புகள் கொண்டவர். அவற்றை மனிதனால் அறிய இயலாது. கடவுள், ஒரு நோக்கம்
; ஒரு செயல் கொண்டவர் அல்லர். வரம்பிலா பரப்புடைமையும் சிந்தனையுமே கடவுளின் இயல்புகள்.
வரம்பிற்குட்பட்ட மனிதனால் அவரை அறிய முடியாது.
மனிதப்
பண்புகளைக் கடவுளுக்கு ஏற்றி வழிபாடு செய்வது அறியாமை. கடவுளுக்கும் உலகிற்கும் ‘படைப்பு
நில்லை’ என்றொரு தொடர்பில்லை. மனிதன் மொழியால் சிந்தனையால் கடவுளை அடைய முடியாது. கடவுளை
எந்த மனிதனும் ; எந்தச் சமயமும் உடைமையாக்கிக் கொள்ள முடியாது. இயற்கை காரணமாகவும்
காரியமாகவும் விளங்குகிறது. கடவுள் / செறிபொருள் இயற்கையை இயக்கியாகவும் இயற்கையில்
இயங்கியாகவும் தோற்றமளிக்கிறது.
எதையும்
எவராலும் எப்போதும் மாற்ற இயலாது ; நடப்பது நடந்தே தீரும்.
இயற்கையின்
முழுமையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அறிவதே
அரியான அறிவு. ‘அறிவே புனிதம்’ என்ற சாக்ரடிசு
கொள்கையை ஏற்றுக்கொள்கிறார். மனிதன் எல்லோரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பது
அளவையியக் கட்டாயம்.
“அறிவுத்
தெளிவே அறம்” – என்கிறார்.
பெனிடிக்ட் ஃச்பினோசாவினைப் பற்றி தற்போதுதான் உங்கள் மூலமாக அறிகிறேன். அவரது கொள்கைகளில் அளவையியல் சற்றே மிகையாக இருப்பதைப்போலத் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு