திருக்குறள் -சிறப்புரை
:1020
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.---- ௧0௨0
மனத்தகத்து நாணம் என்னும் நற்குணம் இல்லாதவர், உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பது,
மரப் பதுமையைக் கயிற்றால் கட்டி உயிருள்ளது போன்று இயக்கி மக்களை மயக்குவது போன்றதாம்.
அகத்தில் அழுக்கும் புறத்தில் தோற்றப்பொலிவும் கொண்டு உலவுவர் பலர்.
போரைத்தடுத்த புலவர்.
” நெடுமதில் வரைப்பின் கடிமனை
இயம்ப
ஆங்குஇனிது இருந்த வேந்தனொடு
ஈங்கு நின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணுத்தகவு
உடைத்தே.” –புறநானூறு.
சோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை
உடைய காவல் அமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும் ; எனினும் மானமின்றி, இனிதாக அங்கே
உறையும் வேந்தனுடன் , இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட
முனைந்தாய் என்பது நாணத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக