ஞாயிறு, 7 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1013


திருக்குறள் -சிறப்புரை :1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. ---- ௧0௧௩
இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் உடம்பை நிலைக்களனாகக் கொண்டு வாழ்கின்றன. அதுபோலச் சால்பு எனப்படுவது நாண் என்னும் நற்பண்பை நிலைக்களனாகக் கொண்டது.
“இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
 திண்மைஉண் டாகப் பெறின்.” –குறள். 988.
ஒருவன் பெருமைக்குரிய  சால்பு என்னும் பண்பைப் போற்றும் மனவலிமை பெற்றானாயின் அவனுக்கு மிக்க துன்பம் தரும் வறுமையும் கூட இழிவானதன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக