ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -101


மெய்ப்பொருள் காண்பது அறிவு -101
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் : 1891 – 1964
 ஆரியர் ஆதிக்கம் – தமிழர் இழிநிலை –அறியாமையால் மனுதர்மத்தை மதித்தது – சூத்திரன் என்றது – சாதிப்பிரிவுகளை நிலைப்படுத்தியது……. இன்னபிற கொடுமைகளுக்கு எதிராக முழங்கியவர்.
 சிந்தனைகள்
1.  சுரண்டலுக்கு இலக்காகிப்போன தமிழ்மக்களை ‘நாம் ஏன் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம்.?’ என்ற உண்மை வரலாற்றை அறிய முன்வர வேண்டும்.
2.  சமஉரிமையை வென்றெடுக்கத் தமிழ்மக்கள் சமரசமற்ற போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
3.   அடிமைகளாய் அறிவற்றவர்களாய் பஞ்சைப் பராரிகளான பாட்டாளிகளாய் இருக்கின்ற சமூகக் கொடுமையின் ஊற்றுக்கண்ணான வருணாசிரமதரும சதியினைத் தமிழன் உணர வேண்டும்.
4.  மனுநீதியே அறத்தின் ஆணிவேர், ஆண்டவனால் அளிக்கப்பட்ட மனித நீதி என்று கூறி அதன் அடிப்படையில் திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி அவர்களின் உடல் உழைப்புக்குச் சொந்தக்காரர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கி, இந்துமதச் சாத்திரப்படி நியாயப்படுத்திச் சாதி மதப் பிரிவுகளை நடைமுறைப்படுத்தி அதற்குள்ளேயும் கீழ்ச் சாதி, இழி சாதி என்று கிளைச் சாதிகளால் மக்களைப் பாகுபடுத்தியுள்ளதை இந்த வெகுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
”நான் செய்யவேண்டியது என்னவென்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிரப் பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல.”
புதியதோர் உலகம் செய்வோம்.
“எல்லாரும் எல்லாமும் பெற்று நல்லோராய் வாழ
   சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடைபெற்று வரும் சண்டையுலகினை
     ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம் பின்னர்
 ஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்.
“கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே.”
முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக