திருக்குறள் -சிறப்புரை
:1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. ---- ௧0௨௭
போர்க்களத்துப் படை வீரர்களுள் போரை வென்றெடுக்கும் வல்லமை, வீரம் செறிந்த
வீரர் ஒருவருக்கே வந்து பொருந்துவதைப் போல நற்குடியில் பிறந்தோர் பலராயினும் குடிப்
பெருமையைக் காக்கும் பொறுப்பு, ஆற்றல் வாய்ந்த ஒருவருக்கே வந்து சேரும்.
“யார் மகள் என்போய் கூறக்
கேள் இனி
குன்றுகண்டு அன்ன நிலைப்பல்
போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக்
குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம்
மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே…..”
–புறநானூறு.
வெல்லும் போரை உடைய அண்ணலே…! யார் மகள் இவள் என்று வினவாநின்றனை ; இனி,
யான் கூறக் கேட்பாயாக, மலையைக் கண்டாற் போன்று நிலையினை உடைய பல நெற்போர்களை, நாள்தோறும்
காலையில் கடா விட்டு அழித்து, குவித்து வைத்துள்ள நெல்லை, வலிய வில் வீரர்களுக்கு நாள்
உணவாகக் கொடுப்பதில், மாற்றம் இல்லாத பழமையான குடிகளை உடைய, மன்னன் மகள் ஆவாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக