மெய்ப்பொருள்
காண்பது அறிவு -99
தெக்கார்த்
(Rene Descartes)……..
சிந்தனை
மனத்தின்
இயக்கமாகிய சிந்தனையே அனைத்திற்கும் அடிப்படை. அனுபவத்தில் அறிவு விளைவதில்லை என்கிறார்.
உண்மை அறிவைத் தருகின்ற ஆற்றல் சிந்தனைக்கு உண்டு. அறி நிலைக்கேற்பச் செயல் திறன் இருப்பின்
தவறு நேர வாய்ப்பில்லை.
மனித
மனத்தின் நிலையை ..
1.
உடனுறைக் கருத்து . பிறக்கும் போதே மனத்தில் பதிவது (கடவுள் பற்றிய கருத்து.)
2.
வந்தேறிய கருத்து (மனித மனத்தால் உருவாக்கப்படுவது.
கடவுள்
கொள்கை)
மனிதர்
இருப்பிற்கும் உலக இருப்பிற்கும் (இருப்பு நிலை) கடவுள் காரணம். காரண காரியத் தொடர்பு
– கடவுள் பற்றிய கருத்து எல்லார் மனத்திலும் ஒரு கட்டாயக் கருத்தாக இருக்கிறது. அக்காட்டாயக்
கருத்துக் காரணமாகக் கடவுள் இருக்கிறார்.
புற உலகில் பிற கருத்துகள் மனத்தில் இருந்தாலும்
அவை சார்புக் கருத்துகள்- கடவுளைச் சார்ந்து எழுந்தவை. கடவுளைத் தவிர பிறவெல்லாம் சார்புப்
பொருள்கள். கடவுள் முழுமுதற் பொருள. இருமைக் கொள்கைவழி உடல், உள்ளம் இவற்றின் இயல்பு,
மாறுநிலை, தொடர்பு ஆகியவற்றை விளக்குகிறார்.
இவருடைய சிந்தனைகள் தொடக்கத்தில் தெளிவையும் முடிவில்
குழப்பத்தையும் தோற்றுவித்தன…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக