திருக்குறள் -சிறப்புரை
:1028
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்
மடிசெய்து
மானம் கருதக் கெடும். ------ ௧0௨௮
தான் பிறந்த குடியின் பெருமையை உயர்த்த நல்ல நேரம் என்று ஒன்றில்லை
; நல்ல நேரம் வரட்டும் என்று சோம்பி இருந்தால்
மானம் அழியப் பிறந்த குடியின் பெருமையும் கெட்டு அழியும்.
”அறம் தலைப் பிரியாது ஒழுகலும்
சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும்
நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு
இல்…” –அகநானூறு.
அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை
நடத்துவதும் உவந்து ஏற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும்
ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக