திருக்குறள் -சிறப்புரை
:1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். ----- ௧0௧௬
மேன்மையானவர்கள் ,நாணுடைமையைத் தமக்கு வேலியாகக்
கொள்வதன்றி, அகன்ற இவ்வுலகினை விரும்பிக் கொள்ளார்.
”வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.” –நாலடியார்.
இந்த உலகம் முழுவதையும் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும்
பொய் கலந்த சொற்களைப் பேசாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக